மேலும்

700 தொன் நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலை வந்தது இந்திய கப்பல்

சுமார் 700 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை அடைந்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஐஎன்எஸ் காரியல் என்ற கப்பல் நேற்றுக்காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பலில் இருந்து உடனடியாக நிவாரணப் பொருட்கள் இறக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

பேரிடரை அடுத்து இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதயகிரி,ஐஎன்எஸ் சுகன்யா ஆகிய கப்பல்கள் உடனடிய நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டன.

அதேவேளை தமிழக அரசினால் வழங்கப்பட்ட 30 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட இந்தியக் கடற்படையின் LCU 54, LCU 51,  LCU 57 ஆகிய 3 தரையிறங்கலங்கள் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை அடைந்தன.

நேற்று இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் 700 தொன் நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையை அடைந்தது.

தமிழக அரசின் இந்த நிவாரண உதவிகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவையும் சந்தித்து அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *