சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பியது இஸ்ரேல்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.
மடிப்பு படுக்கைகள், முதலுதவி பெட்டிகள், அறுவை சிகிச்சை கையுறைகள், சுகாதாரப் பெட்டிகள், நுளம்பு வலைகள், மின் சேமிப்பகங்கள், மழைக்கவசங்கள், மெத்தைகள், தண்ணீர் தொட்டிகள், குழந்தை பாத்திரப் பொதிகள், சமையலறைப் பெட்டிகள், நீரில் மூழ்கக்கூடிய நீரிறைக்கும் இயந்திரங்கள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவை அடங்கிய நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
புதுடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் ஹடாஸ் பக்ஸ்ட், மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகளின் விநியோகம் மற்றும் ஒருங்கிணைப்பை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுவதற்காக சிறிலங்கா வந்துள்ளார்.
இந்த உதவி இஸ்ரேலுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நீண்டகால நட்பை பிரதிபலிக்கிறது.
இந்த கடினமான நேரத்தில் சிறிலங்காவின் மீட்பு முயற்சிகளுக்கு இஸ்ரேல் தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பொருட்களை சரியான நேரத்தில் வழங்குவதையும் விநியோகிப்பதையும் உறுதி செய்வதற்காக, இஸ்ரேலிய தூதரகம் சிறிலங்கா அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

