நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தம்- கிராம அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு
பேரிடர் நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக கிராம அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
நிவாரணப் பணிகளின் போது, கிராம அதிகாரிகள் மீது பல்வேறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியின் போது, கிராம அதிகாரிகள் சுயாதீனமாகச் செயற்படுவதைத் தடுத்தால், அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
