மேலும்

மாதம்: November 2025

கொழும்பில் பிரமாண்டமாக நடந்த ஜேவிபியின் 36வது மகாவிரு நிகழ்வு

ஜேவிபி தலைவர் றோகண விஜேவீரவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஜேவிபி கிளர்ச்சியில் உயிரிழந்த, காணாமல் போன உறுப்பினர்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை மறுஆய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கை கையளிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை  மறுஆய்வு செய்து ரத்துச் செய்வதற்கான பரிந்துரைக்களை முன்வைக்க  நியமிக்கப்பட்ட குழு, தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் சமர்ப்பித்துள்ளது.

5 நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபரிடம் நற்சான்றுகளை கையளிப்பு

கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட 5 நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ்களை வழங்கினர்.

மத்தலவை குறி வைக்கும் அமெரிக்கா

2014 ஆம் ஆண்டில், சீனஅரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீன தேசிய வான்வழி தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், சிறிலங்காவில் விமானப் பராமரிப்பு தளத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பித்தது.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சி முடிவு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி  ஒருமனதாக தீர்மானித்துள்ளது.

போதிய ஆதாரங்கள் இல்லாததால் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில்  அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளால், சிறிலங்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த சீனா உறுதி

சிறிலங்காவில்  பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சீனா உறுதி பூண்டுள்ளதாக, சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசிய குழுவின் உறுப்பினரும், அதன் பொருளாதார விவகாரக் குழுவின் பணிப்பாளருமான வாங் குவோஷெங் (Wang Guosheng) உறுதியளித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வு அதிகாரியை கைது செய்வதற்கான தடை நீடிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக,  முன்னாள் சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரி கேணல் கே.எஸ். மத்துமகேவை கைது செய்வதைத் தடுக்கும், இடைக்கால உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கஜபா – ராஜ்புத் படைப்பிரிவுகள் பங்கேற்கும் மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா- இந்திய இராணுவங்களின்  இரண்டு வார கால மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று முன்தினம் கர்நாடகாவின் பெலகாவியில் ஆரம்பமாகியுள்ளது.