5 நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபரிடம் நற்சான்றுகளை கையளிப்பு
கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட 5 நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ்களை வழங்கினர்.
அதிபர் செயலகத்தில் நேற்றுக்காலை நடந்த நிகழ்வில் 5 நாடுகளின் சார்பில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள், தமது கடமைகளை பொறுப்பேற்பதற்கான அடையாளமாக நற்சான்றுப் பத்திரங்களை சிறிலங்கா அதிபரிடம் கையளித்தனர்.
கனடிய தூதுவர் இசபெல் மேரி கத்தரின் மார்ட்டின், நெதர்லாந்து தூதுவர், வைப் ஜேக்கப் டி போயர், அவுஸ்ரேலிய தூதுவர் மத்யூ ஜோன் டக்வொர்த், அல்ஜீரியா தூதுவர் அப்டெனோர் கெலிஃபி, ஐஸ்லாந்து தூதவர் பெனடிக்ட் ஹோஸ்குல்ட்சன் ஆகியோரே தமது நற்சான்றுப் பத்திரங்களை வழங்கியுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அதிபரின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

