மேலும்

நாள்: 17th November 2025

10 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.66 பில்லியன் டொலர் வருமானம்

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் சிறிலங்காவுக்குகு சுமார் 2.66 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக  சிறிலங்கா மத்திய வங்கி  தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் விகாரை அமைக்க முயன்ற பிக்குகள் விரட்டியடிப்பு

திருகோணமலை- கடற்கரையில் பௌத்த பிக்குகளால் அனுமதியின்றி விகாரை  அமைக்கும் பணி நேற்றிரவு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

சிறிதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஆரம்பம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர், பிரதமர், அமைச்சர்களுக்கு உதவ 37 ஆலோசகர்கள்

சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் ஏழு அமைச்சரவை அமைச்சர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் 37 ஆலோசகர்களை நியமித்துள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.