மேலும்

நிசாம் காரியப்பரை வெளியேற்ற வேண்டும்- ஆளும்கட்சி போர்க்கொடி

நிசாம் காரியப்பரை உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஆளும்கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள், குழுவில் அதிகாரிகள் ஒப்புக்கொண்ட அறிக்கைகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவது கடுமையான குற்றமாகும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

நிசாம் காரியப்பரின் பொறுப்பற்ற செயலுக்காக உயர் பதவிகளுக்கான குழுவிலிருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க கோரிக்கை விடுத்தார்.

ஒரு குழுவில் ஒப்புக்கொள்ளப்பட்ட அதிகாரியின் அறிக்கையை  சமூக ஊடகத்தில் பதிவிடுவது ஒரு பெரிய தவறு.

தொடர்புடைய குழுக்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

அதிகாரிகளின் கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும்.

இது மிக முக்கியமான விடயம். இந்தத் தவறை சரிசெய்ய வேண்டும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்பான தகவல்களை வெளியிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால் விபரங்களை  வெளியிடக்கூடாது.

நாடாளுமன்றக் குழுக்களில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூட வெளியிடப்படக் கூடாது. ஏனெனில் அவை ஒரு பகுதி தான். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *