எல்லை நிர்ணய செயல்முறைக்கு பின்னரே மாகாணசபைத் தேர்தல்
எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பின்னர், அடுத்த ஆண்டு மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன் இராசமாணிக்கம், ஜீவன் தொண்டமான் ஆகியோர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எல்லை நிர்ணய செயல்முறை தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு ஒரு கடமை உள்ளது. அது முடிந்ததும், அதன்படி நாங்கள் முன்னேறுவோம்.
அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்.
முந்தைய தேர்தல் முறையைப் பயன்படுத்துவதா அல்லது புதிய முறையை ஏற்றுக்கொள்வதா என்பது குறித்தும் ஒரு விவாதம் நடத்தப்படும்.
இந்த விடயத்தில் நாடாளுமன்றம் முடிவு செய்யலாம்.”என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
