அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது வழக்குத் தொடரப்படுமா?
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆணைக்குழு முடிவு செய்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ரங்க திசாநாயக்க தெரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
அவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து தீர்மானிப்பது, மூன்று பேர் கொண்ட ஆணைக்குழுவே தவிர, பணிப்பாளர் நாயகம் அல்ல.
இருப்பினும், ஒரு முடிவு எடுக்கப்பட்டவுடன், ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வது அவரது பொறுப்பு.
அமைச்சர் குமார ஜெயக்கொடி தொடர்பான இரகசிய விசாரணை இறுதிக் கட்டத்தில் இருந்தபோது, அது குறித்த தகவல்கள் முன்கூட்டியே ஊடகங்களுக்கு கசிந்தன.
இது விசாரணை செயல்முறையை சீர்குலைத்தது. பிரச்சினை செய்தி வெளியிடுவதுதான்.
குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தகவல் எப்படி வெளிவந்தது என்று நான் கேட்டேன்.
ஆணைக்குழு இன்னும் இந்த விடயம் குறித்து ஆலோசித்து வருகிறது.
வழக்கு தொடரலாம் அல்லது வழக்குப் பதிவு செய்யாமல் போகலாம் – அது ஆணைக்குழுவின் முடிவு.
ஆனால் எந்தவொரு இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கும் முன்னரே செய்தி வெளிவந்தது.
ஆணைக்குழு வழக்குத் தொடர முடிவு செய்தால், குமார ஜெயக்கொடி மீது நான் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வேன்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
