மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராய்ச்சி கைது
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின், தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராய்ச்சி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம், ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தது தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், இவர் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் தர அதிகாரியாக இருந்த இவர், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்து வந்தவர், இராணுவத்தில் இருந்து விலகிய பின்னரும் இவர் தொடர்ந்து அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.