இந்திய கடற்படைத் தளபதி சிறிலங்காவுக்கு பயணம்
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, சிறிலங்காவிற்கு நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இன்று கொழும்பை வந்தடைந்த அவர் 25 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான, பாதுகாப்பு இராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் பயணம், கடல்சார் பாதுகாப்பு, பயிற்சி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அட்மிரல் திரிபாதி சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, பிரதமர் ஹரிணி அமரசூரியா, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட மற்றும் சிறிலங்கா ஆயுதப்படைகளின் தலைவர்களுடன் உயர்மட்ட சந்திப்புகளை நடத்துவார்.
கொழும்பில் நடைபெறும் வருடாந்த சர்வதேச கடல்சார் மாநாடான 12வது காலி கலந்துரையாடலிலும், அட்மிரல் திரிபாதி பங்கேற்கவுள்ளார்.