மன்னார் மருத்துவமனையில் இந்திய உதவியுடன் விபத்து சிகிச்சை பிரிவு
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும், இந்தியா முன்வந்தள்ளது.
இது தொடர்பாக, இந்திய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்களுக்கிடையில் நேற்று சுகாதார அமைச்சில் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க மற்றும் இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபாவை வழங்கும்.மூன்று ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் நிறைவு செய்யப்படும்.