சீனாவுடன் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு அனுமதி
சிறிலங்கா பழங்களுக்கான மதிப்பு கூட்டலை மையமாகக் கொண்ட ஒரு திட்டத்தின் நிலையான தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, சீன வெப்பமண்டல விவசாய அறிவியல் அகாடமியுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது.
இந்த உடன்பாட்டிற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
“தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் கீழ் சீன மக்கள் குடியரசுடன் தொழில்நுட்ப உதவி” என்ற தற்போதைய திட்டம், வாழை, மா மற்றும் அன்னாசி பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பங்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் நீண்டகால கூட்டாண்மையை முறைப்படுத்தும், இது மரபணு பிளாஸ்மா மற்றும் நிபுணர்களின் பரிமாற்றத்தை அனுமதிக்கும்.
மேலும் உள்ளூர் விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களிடையே திறன் மேம்பாட்டிற்கான உதவியை வழங்கும்.
இந்த புரிந்துணர்வு உடன்பாட்டிற்கான முன்மொழிவை விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.