அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதுவர் ஜமிசன் கிரீருக்கும் (Jamieson Greer) இடையில் மெய்நிகர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா பொருட்களுக்கு அமெரிக்கா அறிவித்துள்ள பரஸ்பர வரிகளை குறைப்பது தொடர்பாக இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றதாக , சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் முக்கியமாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமாலை நடந்த இந்த மெய்நிகர் சந்திப்பில், சிறிலங்காவின் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்சன சூரியப்பெருமவும், அமெரிக்க வர்த்தப் பிரதிநிதியின் பணியகத்தின் அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.