இரண்டு வாரங்களுக்குள் புதிய தலைமை நீதியரசர் பரிந்துரை
சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசரை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இரண்டு வாரங்களுக்குள் முன்மொழிவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் தற்போதைய தலைமை நீதியரசர் முர்து பெர்னான்டோ, எதிர்வரும் ஜூலை 27ஆம் நாளுடன், ஓய்வு பெறவுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய அவர் 2024ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி, ஆம் திகதி சிறிலங்காவின் 48 ஆவது தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் ஓய்வு பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இரண்டு வாரங்களுக்குள் புதிய தலைமை நீதியரசரின் பெயரை, முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.