தென்னாபிரிக்காவுக்கான தூதுவராக விமானப்படையின் முன்னாள் தளபதி
தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதுவராக, முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் உதேனி ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார்.
அவரை இந்தப் பதவிக்கு நியமிப்பதற்கு, உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று நடந்த உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் இந்த நியமனத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.