ஐ.நா ஆய்வுக் கப்பலுக்கு தடை இல்லை- அனுமதியும் இல்லையாம்
ஐ.நாவின் ஆய்வுக் கப்பல் சிறிலங்கா வருவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்தக் கப்பல் சிறிலங்கா கடல் பகுதியில் கடல் ஆய்வை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவது குறித்து, இன்னமும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகள் இறுதி செய்யப்படும் வரை, இந்தக் கப்பல் விடயத்தில் பொதுவான எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய அனைத்துக் கப்பல்களுக்கும் பொருந்தும் ஒரேவிதமான கொள்கை தேவைப்படுவதாகவும், இந்த விடயத்தில், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.