மேலும்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை

ஈஸ்டர் ஞாயிறன்று சிறிலங்காவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், ஐஎஸ் அமைப்பு  நேரடியாகத் தொடர்புபடவில்லை என்று சிறிலங்கா புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உள்ளூர் குழுவினார் மாத்திரமே, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிறிலங்கா தற்கொலைக் குண்டுதாரிகளின் காணொளி ஐஎஸ் அமைப்புக்கு, இந்தோனேசியா வழியாகவே அனுப்பப்பட்டுள்ளது. அதனையே அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டனர்.

ஐஎஸ் தலைவர் அல்- பக்தாதி சிறிலங்கா தாக்குதல்களுக்கு பின்னர் உரிமை கோரியிருந்தார்.

தாக்குதலில் ஈடுபட்ட உள்ளூர் குழு, அல்- பக்தாதியின் தலைமையில் செயற்பட்டிருக்கவில்லை. எனினும்  ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருடன் அவர்கள் சில வழிகளில் தொடர்பு கொண்டிருக்கலாம்.

தாக்குதல் நடத்தியவர்கள் தூய ஐஎஸ் அமைப்பு உறுப்பினர்களல்ல. ” என்றும் அந்தப் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேவாலயங்கள் மற்றும் விடுதிகளை இலக்கு வைத்து நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற உள்ளூர் பயணங்கரவாத அமைப்பே மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன் தலைவராக இருந்த சஹ்ரான் காசிமும், தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கருத்து “ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை”

  1. Esan Seelan
    Esan Seelan says:

    சாதகமாக அமைந்ததால் உரிமை காேரினார்களே ஒழிய……. மைத்திரியையும் காேத்தபாயாவையும் தமிழ் இளைஞர்களை விசாரித்த பாணியில் நான்காம் மாடியில் விசாரித்தால் உண்மை வெளிவரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *