மேலும்

மாதம்: May 2019

புலனாய்வு தகவல் பரிமாற்றத்தினால் தீவிரவாதத்தை அழிக்கலாம் – மகிந்தவிடம் அமெரிக்க தூதுவர்

தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து, நட்பு நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

10 கொள்கலன்களில் வாள்கள் இறக்குமதி – நாடாளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்

சிறிலங்காவில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், 10 கொள்கலன்களில் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்.

கொழும்பில் இரு இடங்களில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, ஒருவர் காயம்

கொழும்பு – வத்தளை, ஹுணுப்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நிறுத்தாமல் வேகமாகச் சென்ற வாகனம் ஒன்றின் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

கூட்டமைப்பு – தமிழர் முற்போக்கு கூட்டணி இணைந்து செயற்பட முடிவு

தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் முடிவு செய்துள்ளன.

ஹிஸ்புல்லா மகனுடன் கோத்தாவுக்கு நெருங்கிய தொடர்பு?

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்குத் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் கோத்தாபய ராஜபக்சவுக்கும் நெருக்கமான உறவுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சஹ்ரானின் மகளின் இரத்த மாதிரியைப் பெற்று மரபணுச் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி

ஷங்ரி-லா விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் காசிமின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு, அவரது மகளின் இரத்த மாதிரியைப் பெற்று மரபணுச் சோதனையை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்கா பறக்கிறது சிறிலங்காவின் உயர்மட்டக் குழு – பம்பியோவுடன் முக்கிய பேச்சு

அமெரிக்க- சிறிலங்கா இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறக்கும் வகையில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்கேல் றிச்சர்ட் பொம்பியோ தலைமையிலான குழுவுக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவுக்கும் இடையில், உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.

இரத்மலான விமானப்படைத் தளம் அருகே விமானப் பயிற்சிக்கு தடை

இரத்மலான விமானப்படைத் தளத்துக்கு அருகில், விமானம் ஓட்டும் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஆறு வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்த ஷங்ரி லா குண்டுதாரிகள்

ஷங்ரி-லா விடுதியில் தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தது ஆறு வீடுகளை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தியிருந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஊடகங்களின் கழுத்தை நெரிக்கிறது சிறிலங்கா அரசு

சிறிலங்கா படையினரால் முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, கைப்பற்றப்படும் வாள்கள், கத்திகள் தொடர்பான படங்களை ஊடகங்களில் காட்சிப்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.