வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்
சிறிலங்காவுக்கான பதில் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று மாலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
யாழ்ப்பாணத்தில் நடந்த இந்தச் சந்திப்புத் தொடர்பாக, பதில் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்ததாக கூறியிருப்பதுடன், உண்மையான நல்லிணக்கத்துக்கு, அரசியலமைப்பு சீர்திருத்தம், பொறுப்புக்கூறல், காணிகள் மீளளிப்பு என்பன முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட்டையும், யாழ்ப்பாணத்தில் நேற்று பதில் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் சந்தித்துள்ளார்.
Car permit கொடுத்திருப்பாரோ 🙁