சீனாவின் மூலோபாய முதலீடுகள் பேரழிவுகளை ஏற்படுத்தும் – ஜப்பானுக்கான அமெரிக்க தூதுவர்
சீனா மூலோபாய முதலீடுகள் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்றும், அதற்கு சிறிலங்கா போன்ற நாடுகள் உதாரணமாக இருப்பதாகவும், தெரிவித்துள்ளார், ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதுவர் வில்லியம் எவ் ஹகேற்றி.
சீனாவின் ஒரு பாதை ஒரு அணைத் திட்டம் தொடர்பாக, ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு, கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“சீனாவின் மூலோபாய முதலீடுகள் சந்தை நோக்கத்தைக் கொண்டதல்ல. இது நிலையற்ற கடன்மட்டத்தைக் கொண்டு வரும்.
இதன் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்த முடியும். மலேசியா, சிறிலங்கா, பாகிஸ்தான் போன்ற உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.