கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கைப் புறக்கணித்த சரத் பொன்சேகா
சிறிலங்கா இராணுவம் நடத்திய கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கை, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புறக்கணித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா இராணுவத்தின் எட்டாவது கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு கடந்த மாதம், 30ஆம், 31ஆம் நாள்களில், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எனினும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பெற்ற ஒரே ஒருவருமான சரத் பொன்சேகா இந்த கருத்தரங்கில் பங்கேற்கவில்லை.
அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர் நிகழ்வில் பங்கேற்காதமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுடனான மனக்கசப்புகளால் தான், அவர் இந்தக் கருத்தரங்கைப் புறக்கணித்திருப்பதாக கூறப்படுகிறது.