மேலும்

மகிந்தவின் பதாதைகள், சுவரொட்டிகளை அகற்றிய சிறிலங்கா காவல்துறை

mahinda-trinco (2)மதவாச்சியில் சிறிலங்கா பொதுஜன முன்னணி செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சவின் படங்களுடன் கூடிய தேர்தல் பரப்புரைப் பதாகைகள், சுவரொட்டிகள் சிறிலங்கா காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளன.

தமது கட்சியைச் சாராத தலைவர்களின் படங்களை பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையிலேயே, சிறிலங்கா பொதுஜன முன்னணி செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சவின் படங்களுடன் கூடிய பதாகைகள், சுவரொட்டிகளை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து சிறிலங்கா பொதுஜன முன்னணியின் மதவாச்சி அமைப்பாளர் நந்தசேன, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தமது பணியகத்துக்கு வந்த சிறிலங்கா காவல்துறையினர், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரல்லாத- இன்னொரு கட்சியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சவின் படங்களுடன் கூடிய சுவரொட்டிகள், பதாகைகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று கூறியே காவல்துறையினர் இவற்றை அகற்றியதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *