மேலும்

அம்பாந்தோட்டையில் தொழிற்பயிற்சி நிறுவகத்தை ஆரம்பித்தது சீனா

china-hamabantotaதெற்கு கைத்தொழில் வலயத்தில் சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சாலைகளில் பணிக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கு பயிற்சிகளை அளிப்பதற்கான தொழிற்பயிற்சி நிறுவகம் ஒன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சீனாவும் சிறிலங்காவும் இணைந்து இந்த தொழிற்பயிற்சி நிறுவகத்தை ஆரம்பித்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்தல விமான நிலையத்துக்கு அருகில் இந்த தொழில்நுட்ப நிறுவகத்தை திறந்து வைத்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது, இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தெற்கு அபிவிருத்தித் திட்டத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் இதன் மூலம், வரும் ஆண்டுகளில் இந்தப் பகுதி முற்றாக மாற்றமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

china-hamabantota

தொழிற்பயிற்சி நிறுவகத்தில் இளைஞர்களுக்கு பயிற்சிகளை அளிக்க சீனா முன் வந்துள்ளமைக்கும் சிறிலங்கா பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய சீனத் தூதுவர் யி ஷியான்லியாங், எல்லா திட்டங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் தகுதியான மனித வளங்களே தேவைப்படுகின்றன.  தகுதியான மனித சக்தி இல்லாமல் நிதி வளங்கள் இருந்து பயனில்லை.

எல்லா முதலீட்டாளர்களுக்கும் நாம் ஆதரவளிக்க வேண்டும். சீனர்கள் மட்டுமன்றி, சிறிலங்கா, மற்றும் ஏனைய நாட்டவர்களும் இந்த வலயத்தில் முதலீடு செய்ய முன்வந்தால், அவர்களுக்கு எம்மால் பயிற்சி அளிக்க முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கருத்து “அம்பாந்தோட்டையில் தொழிற்பயிற்சி நிறுவகத்தை ஆரம்பித்தது சீனா”

  1. Mahendran says:

    இந்நேரத்தில் சீனாவின் ஆக்கபூர்வமான வேலைத்திட்டம்

Leave a Reply to Mahendran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *