மேலும்

சுதந்திரக் கட்சி உறுப்புரிமை நீக்கத்தை மீளாய்வு செய்யக் கோருகிறார் பீரிஸ்

GL-Peirisதனது உறுப்புரிமையைப் பறிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த முடிவை மீளாய்வு செய்ய வேண்டும் என்று, முன்னாள் வெளிவிவகார  அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்படும், ஜி.எல்.பீரிஸ், அந்த அணியினரால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பீரிஸ் இழந்து விட்டார் என்று, கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க நேற்று அறிவித்தார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பொது எதிரணியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட்ட போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவும் இடைநிறுத்தப்பட்டார்.

ஆனால் அவர் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டதும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அந்த முடிவை ரத்துச் செய்தது. இந்தப் பின்னணியைக் கொண்டு எனது நீக்கத்தையும் ஆராய வேண்டும்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உரிமைக்கு நான் சவால் விடுக்கப் போவதில்லை.

ஒழுங்கை மீறிய இரண்டு உறுப்பினர்களுக்கு எதிரான இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடியாது.

ஒழுக்காற்று நடவடிக்கை விடயத்தில், இரட்டை நிலைப்பாட்டை சுதந்திரக் கட்சித் தலைமை கடைப்பிடிக்கக் கூடாது.

எனது உறுப்புரிமை நீக்கத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீளாய்வு செய்யும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *