மேலும்

எந்த சமஷ்டி முறையை உருவாக்கவும் விடமாட்டோம் – சிறிலங்கா அமைச்சர்

lakshman kiriellaபுதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்காது என்று, சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம்.

அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் பாதுகாக்கப்படும்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவற்கான நாடாளுமன்றக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதம் முக்கியத்துவம் இழக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.  அவ்வாறு எதுவும் நடக்காது என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

புதிய அரசியலமைப்பு இன்னமும் கலந்துரையாடல் நிலையில் தான் உள்ளது. இன்னமும் ஒரு பந்தியோ, பிரிவோ கூட வரையப்படவில்லை.

எதற்கு இணங்கலாம், எதற்கு இணங்க முடியாது என்று விவாதித்து வருகிறோம். எல்லா இனங்களும் அமைதியாக வாழக் கூடிய அரசியலமைப்பு ஒன்றே நாட்டுக்குத் தேவை.

எத்தனை பேரணிகள் நடத்தப்பட்டாலும் பௌத்த மதத்துக்கோ நாட்டின் ஒற்றுமைக்கோ ஆபத்தான எதையும் அரசாங்கம் செய்யாது” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *