மேலும்

ருக்கி பெர்னான்டோவிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர விசாரணை

ruki_fernandoபிரித்தானியாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாடு ஒன்றில் பங்கேற்கச் சென்ற சிறிலங்காவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னான்டோ, கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

பிரித்தானியாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மனித உரிமைகள் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக, ருக்கி பெர்னான்டோ நேற்று கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தார்.

அங்கு அவரைத் தடுத்து வைத்து புலனாய்வுப் பிரிவினர் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தினர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் வரை ருக்கி பெர்னான்டோ தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

சட்டவாளர்கள் தலையிட்டதை அடுத்து. விமானம் புறப்படுவதற்கு முன்னரே அவர் விடுவிக்கப்பட்டார்.

பிரித்தானியாவில் நடைபெறும் மனித உரிமை மாநாடு தொடர்பாகவே ருக்கி பெர்னான்டோவிடம் புலனாய்வுப் பிரிவினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக தமக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ள சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி, சம்பந்தப்பட்ட பிரிவிடம் விசாரித்து அறிந்து கொள்ள வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *