மேலும்

கொழும்பு வந்தது அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி விநியோகக் கப்பல்

USS Frank Cable - colombo (1)அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிகளுக்கான உதவி மற்றும் விநியோகக் கப்பலான, யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நான்கு நாள் பயணமாக கொழும்பு வந்துள்ள அமெரிக்க கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் நேற்று பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் ட்ரூ சென். ஜோன், சிறிலங்கா கடற்படையின் மேற்குப் பிராந்தியத் தலைமையகத்துக்குச் சென்று, பிராந்திய கடற்படைத் தளபதி கொமடோர் சேனாரத்தை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

USS Frank Cable - colombo (1)USS Frank Cable - colombo (2)

கொழும்பில் தரித்திருக்கும் காலப்பகுதியில், யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் கப்பலில் உள்ள 500இற்கும் அதிகமான மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *