மேலும்

சிறிலங்கா அதிபருக்கு எதிராக சைபர் போர் தொடுத்த 17 வயது மாணவன் கைது

Arrestசிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவி, அதிலிருந்து தரவுகளை அழித்து, சிறிலங்கா அதிபருக்கு எதிராக சைபர் போர் எச்சரிக்கை விடுத்த குற்றச்சாட்டில், 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நாள் விசாரணைகளின் முடிவில், கடுகண்ணாவையைச் சேர்ந்த இந்த மாணவனை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், இணையக் குற்றப் பிரிவு காவல்துறையினரும் இணைந்து கைது செய்தனர்.

கடந்த 25ஆம் நாள் முதல்தடவையாக சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இணையத்தளத்தின்  ஊடுருவிய இந்த மாணவன் அதனை முடக்கியதுடன், பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஊடுருவி சில தரவுகளை அழித்துள்ளார்.

இதையடுத்து, சிறிலங்கா அதிபரின் இணையத்தளம் முற்றாக முடங்கியது.

இந்த இணையத்தை முடக்கியவர்கள், சிறிலங்கா அரசுக்கு சில நிபந்தனைகளை விதித்திருந்ததுடன் இதற்கு இணங்காவிடின் சிறிலங்கா அதிபருக்கு எதிராக சைபர் போரைத் தொடுப்பதாகவும் எச்சரித்திருந்தனர்.

சிறிலங்கா இளைஞர்கள் என்று தம்மை உரிமை கோரிய இவர்கள், க.பொ. உயரத் தரத் தேர்வை ஏப்ரலில் நடத்த எடுத்துள்ள அரசாங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்து வழமை போல ஓகஸ்ட் மாதம் நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *