மேலும்

பிரித்தானிய கருத்து வாக்கெடுப்பு – ஆரம்பக்கட்ட முடிவுகளில் கடும் போட்டி

uk-voteஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதா அல்லது அதனை விட்டு பிரிந்து செல்வதா என்பது குறித்து பிரித்தானிய மக்கள் மத்தியில் நேற்று நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பின் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் படி, 50.7 வீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதற்குச் சாதகமாக வாக்களித்துள்ளனர். எனினும், சமநிலையில் போட்டி காணப்படுவதால், நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன.

முன்னைய செய்தி

கடுமையான போட்டி நிலவும் இந்தக் கருத்து வாக்கெடுப்பில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, பிரித்து செல்வதற்கு சாதகமாக அதிகளவானோர் வாக்களித்துள்ளனர்.

மொத்தமுள்ள 382 வாக்கெடுப்பு பிரதேசங்களில் 15 வாக்கெடுப்பு பிரதேசங்களின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வதற்கு  ஆதரவாக 51.5 வீதமானோரும், தொடர்ந்தும் இணைந்திருப்பதற்கு ஆதரவாக  48.5 வீதத்தினரும் வாக்களித்துள்ளனர்.

uk-vote

இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறவதற்கு 16.5 மில்லியன் வாக்குகளைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விருப்பம் வெளியிட்டிருந்தார் என்பதுடன், பிரித்தானியப் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நான்கு சிறிலங்கா அமைச்சர்கள் லண்டன் சென்று பரப்புரைகளிலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *