மேலும்

வெடிவிபத்து குறித்து நான்கு பக்க விசாரணை – ஓரம்கட்டப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு

Brigadier-Jayanath-jayaweeraகொஸ்கம – சலாவ இராணுவ ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பாக, நான்கு தரப்புகளால் சமாந்தரமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

“விசாரணைகளின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக, நான்கு தரப்புகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முப்படைகளின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவினால், ஒரு விசாரணை முன்னெடுக்கப்படும். இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்ட, இராணுவ நீதிமன்றம் ஒன்றினாலும் விசாரிக்கப்படும். அதைவிட குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையும் இடம்பெறுகிறது. நீதிமன்ற விசாரணையும் முன்னெடுக்கப்படும்.

நேற்றுக்காலையிலும்,  சிறியதொரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. அதையடுத்து, அவிசாவளை – கொழும்பு வீதி 10 நிமிடங்களுக்கு மூடப்பட்டது.

சிறிய வெடிப்புகள் இடம்பெறுவது வழமை. பொதுமக்களின் பாதுகாப்பை இராணுவம் உறுதிப்படுத்தும்.

தீயணைப்பு ஒத்திகை ஒன்றின் போது, தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி வெளியிட்ட கருத்து, அவருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடிப்படையாக கொண்டது.

ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது, விசாரணைகளின் முடிவில் தான் தெரிய வரும் என்று தெரிவித்தார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவு எதற்காக இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்படவில்லை என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரிகேடியர் ஜெயவீர, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் இராணுவ நீதிமன்றத்துக்கு, இராணுவத்தின் எல்லா படைப்பிரிவுகளினதும், உதவியைக் கோரும் அதிகாரம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *