அடுத்து பசில், நாமல் கைதாவர்? – தொடரப்போகிறது ராஜபக்ச குடும்பத்தின் சிறைவாசம்
அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் அடுத்ததாக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிதி மோசடி குற்றச்சாட்டில், யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ராஜபக்ச குடும்பத்தில், அடுத்து கைது செய்யப்படும் நிலையில் நாமல் ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் இருக்கின்றனர்.
அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் அடுத்ததாக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாமல் ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும், உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 150 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால், பொதுச்சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், இவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாகவும், கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.