மேலும்

பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டம் குறித்து சிறிலங்கா அரசுடன் பேசப்படவில்லையாம்

lakshman kiriellaஇராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான இந்திய அரசாங்கத்தின் திட்டம் குறித்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படவில்லை என்று, சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த திட்டம் தொடர்பாக நாம் அறிந்திருக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கத்துடன் இது தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை.” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதேவேளை, இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பாக இந்தியாவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆறு மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியிட்ட போதும், அதுபற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்திருந்தார்.

கடந்தவாரம் இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த திட்டம் தொடர்பாக, புதுடெல்லி வந்திருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், சிறிலங்கா பிரதமர் தரப்பில் இருந்து இதுவரை எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.

ஒரு கருத்து “பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டம் குறித்து சிறிலங்கா அரசுடன் பேசப்படவில்லையாம்”

  1. ரவி/சுவிஸ் says:

    இலங்கை அரசு இதற்கு உடன்படக் கூடாது, சீனா மேற்கு நாடுகளை முறியடிக்க, இந்தியா எந்த திட்டத்தை வேண்டுமானாலும் போடலாம், அது அவர்கள் உரிமை, ஆனால் இலங்கை விசஜத்தில் தலை இட மூக்கை நுழைக்க, இலங்கை அரசு உடன்படக் கூடாது என்பதே இலங்கை மக்களின் விருப்பம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *