மேலும்

சிறிலங்காவுடன் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி – ரணிலிடம் சமந்தா பவர்

ranil-samantha (2)அமெரிக்க – சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரதணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நிலையான அமைதியை ஏற்படுத்தும் சிறிலங்காவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் சமந்தா பவர் இந்தச் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

ranil-samantha (1)ranil-samantha (2)ranil-samantha (3)

நேற்றிரவு 7.30 மணியளவில் நடந்த இந்தச் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்ச, சுவாமிநாதன், ரவூப் ஹக்கீம், சாகல ரத்நாயக்க, மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர்.

இந்தச் சந்திப்பையடுத்து, சமந்தா பவருக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இராப்போசன விருந்து வழங்கியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *