பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன் சீமெந்து ஆலையை அழித்து விட்டார்கள் – முகாமையாளர் குற்றச்சாட்டு
பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, எமது சிறிலங்கா படையினரின் உதவியுடன் எமது ஆட்களே அழித்து விட்டதாக, விசனம் வெளியிட்டுள்ளார் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் வேலை முகாமையாளர் ரியாஸ் சாலி.
”காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இயந்திரங்கள் உள்ளிட்ட 1000 மில்லியன் ரூபா சொத்துக்களை அழிப்பதற்கு அனுமதித்ததற்கு சிறிலங்கா இராணுவமே பொறுப்பேற்க வேண்டும்.
பிரபாகரன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, பாதுகாத்த அதேவேளை, எமது எமது ஆட்களே, அதிபர் மாளிகையை கட்டும் எண்ணத்துடன் அதனை அழித்து விட்டனர்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் நிலை குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த ஏப்ரல் மாதமே தெரியப்படுத்தியிருந்தேன். இதுவரை அவரிடம் இருந்து பதில் வரவில்லை.
கடந்த ஏழு மாதங்களாக அவருக்கு பல உயர்மட்ட உள்நாட்டு, வெளிநாட்டுக் கடமைகள் இருந்திருக்கலாம்.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்திடம் இருந்து அவர் அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளார் என்பது தெரியும்.
ஈபிடிபியும் கூட, சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளது.” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.