மேலும்

ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க முண்டியடிக்கும் நாடுகள்

Mangala-unhrc (2)ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நேற்று வரை 38 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இந்த கூட்டத்தொடரில், சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், அமெரிக்க, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து, தீர்மானத்தை முன்வைத்திருந்தன.

இந்த தீர்மானம், நேற்று முன்தினம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அப்போது,  அல்பேனியா, அவுஸ்ரேலியா, ஜேர்மனி, கிறீஸ், லத்வியா, மொன்ரெனிக்ரோ, போலந்து. ருமேனியா, சிறிலங்கா, மசிடோனியா, பிரித்தானியா, அமெரிக்கா 12 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.

எனினும், இந்த தீர்மானத்துக்கு, வரும் 16ஆம் நாள் வரை இணை அனுசரணை நாடுகளாக இணைந்து கொள்ள முடியும் என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகச் செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்று மேலும் 24 நாடுகள், இணை அனுசரணையாளர்களாக இணைந்து கொண்டுள்ளன.

எஸ்தோனியா, பிரான்ஸ், அயர்லாந்து. ஜப்பான், தென்கொரியா, சியராலியோ, ஒஸ்ரியா, பொஸ்னியா – ஹெர்செகோவினா, கனடா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஜோர்ஜியா, ஹங்கேரி, இத்தாலி, லிச்ரென்ஸ்ரெய்ன், லக்ஸ்சம்பேர்க், மால்டா, நோர்வே, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளே புதிய இணை அனுசரணையாளர்களாக நேற்று இணைந்துள்ளன.

இதையடுத்து. சிறிலங்கா குறித்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியுள்ள நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *