மேலும்

எவராலும் கருத்தில் கொள்ளப்படாத புலம்பெயர் மக்களின் உரிமைகள் – பிரான்செஸ் ஹரிசன்

toutureசிறிலங்காவில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாகப் பேசப்படுகின்றது. ஆனால் இன்னமும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் எவ்வாறான உரிமைகளை இழந்து வாழ்கின்றனர் என ஆராயப்படவில்லை.

இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் huffingtonpost ஊடகத்தில், பிரான்செஸ் ஹரிசன் (Frances Harrison* ) எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

தமது சொந்த நாட்டிலிருந்து ஒரு தடவை புலம்பெயர்ந்த மக்கள் அந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பில் ஆதரவளிக்க இயலாதவர்களாகக் கருதப்படுகின்றனர். புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் பிள்ளைகள் தமது சொந்த மொழியைப் பேசமுடியாதவர்களாகவும் கலாசாரத்தைப் புரிந்து கொள்ள முடியாவதவர்களாகவும் நோக்கப்படுகின்றனர்.

சிலவேளைகளில் புலம்பெயர் சமூகத்தவர்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் அவர்கள் செல்வச் செழிப்போடு வாழ்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் தமது சொந்த நாட்டை இழந்து வாழ்கின்றார்கள். இவர்களால் இந்த உணர்வை வார்த்தைகளால் கூறமுடியாது.

எங்கள் எல்லோரையும் போல் அவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருக்கவில்லை. அவர்கள் தமது சொந்த நாட்டைப் பிரிந்தே வேறு நாடுகளில் வாழ்கின்றனர்.  இதனால் இவர்கள் தமது கருத்துக்களை உரத்துச் சொல்வதற்கான உரிமையை இழந்துள்ளனர்.

புலம்பெயர் அரசியல் என்ற ஒன்று உண்டு. வெளிநாடுகளில் இவர்கள் தமக்கான சிறிய அரசியற்கட்சிகளைக் கொண்டுள்ளனர். இவர்களின் அரசியலைக் கேலித்தனம் செய்வது இலகுவானது. இந்த மக்களுக்குள் நீண்டதொரு ஏக்கம் காணப்படுகிறது.

புலம்பெயர்ந்த மக்களின் தொழினுட்பத் திறன் மற்றும் முதலீடு போன்றவற்றைத் தாம் வாழும் நாடுகளில் பயன்படுத்த வேண்டிய நிலையிலுள்ளனர். இவர்களின் அரசியல் கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் போன்றன இவர்கள் தாம் வாழும் நாட்டிற்குள்ளே நிதிப் பலம் பொருந்தியவர்களாக அல்லது அதிகாரம் பெற்றவர்களாக விளங்கும் போது மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

ஒத்திசைவான ஒரு அமைப்பாகச் செயற்படுகின்ற புலம்பெயர் மக்களைப் பற்றி இங்கு பேசப்படவில்லை. வேறுபட்ட தலைமுறையினர், வேறுபட்ட கல்வி மட்டங்கள், பல்வேறு துன்பங்களைச் சந்தித்த புலம்பெயர் மக்களின் அரசியல் கண்ணோட்டம் தொடர்பாகவே இங்கு கூறப்படுகிறது.

உலகெங்கும் சில மில்லியன் புலம்பெயர் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஒரு சாரார் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வெளிநாடுகளில் குடியேறியவர்களாவர். ஏனையவர்கள் அண்மைய மாதங்களில் சிறிலங்காவை விட்டுப் புலம்பெயர்ந்தவர்களாவர்.

சிறிலங்காவில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாகப் பேசப்படுகின்றது. ஆனால் இன்னமும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் எவ்வாறான உரிமைகளை இழந்து வாழ்கின்றனர் என ஆராயப்படவில்லை.

சிறிலங்காவின் உள்நாட்டிற்குள் வாழும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகப் பேசப்படுகிறது. இவர்கள் முன்னால் போர் வலயங்களில் வாழ்ந்த தமிழ் மக்களாகவும், தமது அன்பிற்குரியவர்களைத் தேடுகின்றவர்களாகவும் உள்ளனர். இதனால் உள்நாட்டில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பாகத் தற்போது பேசப்படுகின்றது.

சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லீம்கள் தொடர்பாகப் பேசப்படுகின்றது. இவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் போது எதிர்காலத்தில் மீளிணக்கப்பாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் நாட்டிற்கு வெளியேயும் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் மக்கள் வாழ்கின்றனர். இவர்களால் வெளியில் கூறமுடியாதளவு குற்றங்களை நேரில் பார்த்த பின்னர் தற்போது நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

இவர்களைக் கண்ணுக்குத் தெரியாதவர்கள் என நான் இங்கு குறிப்பிடுகிறேன். இவர்கள் தாம் வாழும் புதிய நாடுகளிலுள்ள எரி-பொருள்நிரப்பு நிலையங்களில் அல்லது சிறப்புச் சந்தைகளில் இனந்தெரியாதவர்களாக வாழ்கின்றனர்.

இவர்கள் தொடர்பாhன கதைகள் அல்லது இவர்கள் பட்ட துன்பங்கள் வேறெவருக்கும் தெரியாது. இப்புலம்பெயர்ந்த மக்களுடன் இணக்கப்பாட்டை உருவாக்குதல் அல்லது அவர்களது இழப்புக்களை ஈடுசெய்தல் என்பது தொடர்பாக எவரும் பேசவில்லை. இவர்கள் கண்ணுக்குத் தெரியாதவர்களாக தமது நாட்களைக் கழிக்கின்றனர்.

இவர்கள் தாம் வசிக்கும் புதிய நாடுகளில் பல்வேறு துன்பங்களை நாள்தோறும் அனுபவிக்கின்றனர். இவர்கள் லண்டனின் அல்லது சூரிச்சின் நடைபாதைகளில் அலைந்து திரிகின்றனர். இதன்போது இவர்கள் தாம் பட்ட சித்திரவதைகளை மீட்டிக்கொள்வார்கள்.

இவர்களது உடல்களில் சிகரெட்டால் அல்லது வேறு பொருட்களால் சுடப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தொடர்ந்தும் இந்த வடுக்களுடனேயே வாழவேண்டிய நிலையிலுள்ளனர்.

இவர்களில் சிலரால் ஒருபோதும் மேலாடைகளை அணியமுடியாத அளவுக்கு தீக்காயங்கள் உள்ளன. ஏனெனில் இவர்களது கால்களில் அல்லது முதுகில் காய்ச்சிய இரும்புக் கம்பியால் சுடப்பட்ட அடையாளங்கள் உள்ளன.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பலர் தமது துன்பங்களை மறைக்க முனைகிறார்கள். ஏனெனில் இவர்கள் தொடர்ச்சியாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமையை எண்ணி வெட்கமுறுகின்றனர். அத்துடன் தங்களால் தமது குடும்பத்தவர்கள் இலக்கு வைக்கப்படுவார்களோ என இவர்கள் அச்சப்படுகின்றனர்.

கால்நகங்கள் பிடுங்கப்பட்டு இப்போது அவை திரும்பவும் முளைக்கின்றன. இவர்களது உடல்களை உலோகத் துண்டுகள் பதம் பார்த்துள்ளன. இவை அறுவைச் சிகிச்சை மூலம் வெட்டியகற்றப்பட முடியும். பற்கள் மீளவும் சீர்செய்யப்பட முடியும். ஆனால் இவர்கள் தமது சொந்த நாட்டில் பெற்றுக் கொண்ட மன, உள ரீதியான வடுக்கள் ஒருபோதும் அவர்களது எண்ணங்களிலிருந்து அழிக்கப்பட முடியாது.

முற்றுமுழுதாக இவர்களால் இதனை மறந்து வாழ முடியாது. சித்திரவதையே இவர்களது வாழ்வாக உள்ளது.

இவர்கள் வெளிநாடுகளில் சுகபோக வாழ்வை வாழ்வதாகக் கூறப்படுகின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளில் புகலிடம் கோரும் போது அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்படுகின்றனர். இதனால் இவர்கள் மீளவும் உளத் தாக்கத்திற்கு உட்படுகின்றனர்.

புகலிடம் கோரிய மக்கள் சிலர் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்பப்படும் போது அங்கே தற்கொலை முயற்சிகளை மேற்கொள்ள முனைகின்றனர். இதனால் இவர்கள் தடுத்து வைக்கப்படும் போது தற்கொலை முயற்சியை மேற்கொள்வதைத் தடுப்பதற்காக கண்காணிப்பாளர்கள் ஓய்வின்றி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

மீண்டும் சிறிலங்காவின் சித்திரவதை முகாங்களில் தாம் தடுத்து வைக்கப்படுவதால் தாம் எத்தகைய மனக்குழப்பத்திற்கு உள்ளாகுகிறோம் என புகலிடம் கோரிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும் மக்கள் சிலவேளைகளில் அர்த்த ராத்திரிகளில் திடுக்கிட்டு விழித்து அச்சங்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் அல்லது அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட பல ஆண்டுகள் தமக்கான புகலிட நிலையைப் பெறக் காத்திருக்க வேண்டியுள்ளனர்.

சித்திரவதைகளை அனுபவித்து அதிலிருந்து விடுபட்ட பலர் தமக்குத் தெரிந்தவர்களின் குடியிருப்புக்களில் நிலத்தில் நித்திரை செய்து, வீட்டுப் பணிப்பெண்களாகப் பணிபுரிந்து, மற்றையவர்களின் பிள்ளைகளைப் பராமரித்து என பல கடினங்களை எதிர்கொள்கின்றனர். இதன்பின்னரே இவர்கள் தமக்கான தொழிலையும் தங்குமிடத்தையும் பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த மக்கள் தமது புகலிடக் கோரிக்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பல்வேறு கடினங்களை எதிர்கொண்டாலும் கூட, இவர்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. இது ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களின் நிலையாகும்.

இந்தியா அல்லது தென்னாசியாவில் இந்த நிலை மிகவும் மோசமானது. எந்தவொரு கணத்திலும் புலம்பெயர் மக்கள் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு சிறிலங்காவுக்குத் திருப்பியனுப்பப்படுவர். ஒட்டுமொத்தத்தில் இவர்கள் இருண்ட வாழ்வையே வாழ்கின்றனர்.

இவர்களால் மிகமோசமான காயங்களுக்கு மருந்து கட்ட முடியாத ஏதிலிகளாக வாழ்கின்றனர். இவர்கள் தமது உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இவ்வாறான வாழ்வை வாழ்கின்றனர்.

2009ல் சிறிலங்காவில் யுத்தம் முடிவுற்ற பின்னர், போரிலிருந்து தப்பிய எத்தனை தமிழ் மக்கள் ஐரோப்பாவிற்கு, அவுஸ்திரேலியாவிற்கு, மலேசியாவிற்கு, தாய்லாந்திற்கு, இந்தியாவிற்குத் தப்பிச் சென்று வாழ்கின்றனர் என்பது எவருக்கும் தெரியாது. இவர்கள் ஏன் தற்போது தமது நாட்டின் எதிர்காலம் தொடர்பாகக் குரல் கொடுக்க முடியாதவர்களாக வாழ்கின்றனர்?

இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்ப் புலிகள் என்பதன் காரணமாகவே அனைத்துலக சமூகமும் அரசாங்கமும் இவர்களை ஓரங்கட்டுவதாகச் சிலர் கூறுவர். ஆனால் இவர்களால் சிறிலங்காத் தீவின் எதிர்காலம் தொடர்பாக குரல் கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே வாழ்கின்றனர் என்பது நிச்சயமாகும்.

தமது உடல்கள் மட்டுமே இங்கிலாந்திலும் அல்லது சுவிற்சார்லாந்திலும் இருப்பதாகவும் ஆனால் தமது மனங்கள் தமது சொந்த நாட்டிலேயே இருப்பதாகவும் சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக் கட்டப் போரில் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

இந்தப் போரில் இறந்தவர்கள் யார், உயிர் மீண்டவர்கள் யார் என்பதை அறிவதற்காக இவர்கள் இணையச் செய்திகளைப் பார்வையிடுகின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்ற மக்களல்ல. இவர்கள்  கண்ணுக்குப் புலப்படாத மக்களாக வாழக்கூடாது.

சிறிலங்காப் போரின் தாக்கத்தால் உளத்தாக்கத்திற்கு உள்ளாகிய மக்கள் வாழ்வதாக மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி அமைப்புக்கள் கூறுகின்றன.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் இது தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்ததுடன் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பு மற்றும் நம்பிக்கை போன்றவற்றை உள்ளடக்கியதாக எதிர்காலத்தில் எந்தவொரு பொறுப்புக் கூறலும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ஆனால் சிறிலங்காப் போரின் போது மிக மோசமான சித்திரவதைகள் மற்றும் துன்பங்களுக்கு ஆளாகி தமது விருப்பிற்கு மாறாக வெளிநாடுகளில் அண்மைக்காலங்களில் அடைக்கலம் புகுந்துள்ள பல நூறு வரையான போரிலிருந்து மீண்டெழுந்தவர்களை சிறப்பு அறிக்கையாளர் கூடத் தனது கவனத்திற் கொள்ள மறந்துவிட்டார்.

* Frances Harrison – Ex-BBC Correspondent, Ex-Amnesty International, Journalist & Author of ‘Still Counting the Dead’ – book on Tamils who survived Sri Lanka’s 2009 war

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *