மேலும்

வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களுக்கான தடை விவேகமற்ற முடிவு

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் தடை முற்றிலும் விவேகமற்ற முடிவு என்று இலங்கை கடற்படையின் முன்னாள் தலைமை நீரியல் நிபுணர் றியர் அட்மிரல் வை.என். ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாத்பைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மாநாட்டில், கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு மட்டுமே உதவும்.

கடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சியில் சிறிலங்கா அரசு முதலீடு செய்யாத நிலையில், நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் முற்றிலும் வெளிநாட்டு ஒத்துழைப்புகளையே சார்ந்துள்ளன.

சிறிலங்கா துறைமுகங்களுக்கு எந்த வெளிநாட்டுக் கப்பலும் வராததால், துறைமுக அழைப்புகளை இழக்கிறோம், இது ஒரு பொருளாதார இழப்பாகும்.

அதேபோல எமது அடுத்த தலைமுறை கடல் விஞ்ஞானிகளுக்கு கூட்டு கடல் விஞ்ஞான வாய்ப்புகளையும் இழக்கிறது என்றும் றியர் அட்மிரல் வை.என். ஜெயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *