கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உடல் தீயுடன் சங்கமம்
கவிஞரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியும், புதினப்பலகை ஆசிரியருமான மறைந்த கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் இறுதிநிகழ்வு பிரான்சில் நேற்று இடம்பெற்றது.
ஐரோப்பிய நேரப்படி நேற்று மதியம் 12 மணியளவில், கி.பி.அரவிந்தன் அவர்களின் உடல் Villetaneuse என்ற இடத்தில் உள்ள, மின்தகனமேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு பெருமளவான உறவினர்களும், நண்பர்களும், ஆர்வலர்களும் அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தினர்.
அதையடுத்து, குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் சார்பில் துயர்பகிர்வு உரைகள் நிகழ்த்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து, கி.பி.அரவிந்தன் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த இறுதி வணக்க நிகழ்வில் பிரித்தானியா, ஜேர்மனி, நோர்வே, சுவிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
மறைந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் இறுதிநிகழ்வின் காணொளித் தொகுப்பை இங்கு காணலாம். https://www.youtube.com/watch?v=D1yqZL4D3b8