மேலும்

திருப்பதி சென்ற சிறிலங்கா பிரதமருக்கு திருத்தணியில் கருப்புக்கொடியுடன் எதிர்ப்பு

mdmk-protest-1சிறிலங்காப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருத்தணியில் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியா சென்றுள்ள சிறிலங்காப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்குச் சென்றார்.

அவர், ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து திருப்பதிக்குச் சென்று திரும்பும் வரை, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பதி சென்ற சிறிலங்கா பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருத்தணியில் கறுப்புக்கொடி காட்டி ம.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.mdmk-protesst-2mdmk-protest-1

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, தமிழ்நாட்டு மீனவர்கள் 600 பேரை சுட்டுப் படுகொலை செய்து, 2000 க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களை இடித்து தரைமட்டமாக்கிய, அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்கள் 5 பேரின் மீது பொய் வழக்கு போட்டு தூக்குதண்டனை விதித்து மரணக்கொட்டடையில் அடைத்து வைத்துள்ள சிங்கள பேரினவாத அரசின் கொலைகாரன் ராஜபக்‌சவின் கூட்டாளியான சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ண திருப்பதி வரக்கூடாது என்று தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது கருப்புக்கொடியுடன் திருப்பதி நோக்கி புறப்பட்ட 250க்கும் மேற்பட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.d.m.jeyaratna-thiruppathy-1d.m.jeyaratna-thiruppathy-2இதற்கிடையே திருப்பதியில், இன்று வழிபாடு செய்த சிறிலங்கா பிரதமருக்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது.

பத்மாவதி விருத்தினர் விடுதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், ஆலயத்துக்குள் பலத்த பாதுகாப்புடன் சிறிலங்கா பிரதமர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு கருவறை முன்பாக, சுமார் 10 நிமிடங்கள் தரிசனம் செய்த அவருக்கு, பட்டு ஆடை, லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.

சிறிலங்கா பிரதமரின் வருகையை முன்னிட்டு திருமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *