சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை இந்தியத் தூதுவர் சந்திப்பு
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இன்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இன்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, உலங்குவானூர்தி விமானியாக போர்க்களப் பகுதிகளில் பணியாற்றியவர் என்றும், விடுதலைப் புலிகளின் ஆர்.பி.ஜி தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயர் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு இன்று காலை அறிவித்துள்ளது.
வடக்கில் சிறிலங்கா இராணுவம் நிலை கொண்ட பின்னரே, போதைப்பொருள்கள் புழக்கத்தில் விடப்பட்டதாகவும், சிறிலங்கா இராணுவமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்திய குற்றச்சாட்டை, யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நிராகரித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வலு மற்றும் சக்தி தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இம்மாத இறுதியில் கொழும்பு வரவுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதல் முடிவுக்கு வந்த பின்னரும், யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரின் 93 படைமுகாம்கள் இன்னமும் இயங்கி வருவதை யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
சீனாவுக்கான தனது பயணம், சீன – சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுடன் தொடர்ச்சியானதும் நிலையானதுமான இராணுவ உறவுகள் தொடர வேண்டும் என்று சீனப் பாதுகாப்பு அமைச்சர் சாங் வான்குவான் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பாதுகாப்புக் கற்கைகளுக்கான ரோயல் கல்லூரியைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.