மேலும்

Archives

துப்பாக்கி ரவை வடிவ தீபத்தை ஏற்றி வைத்து போர் வெற்றியை கொண்டாடினார் மகிந்த

போர் வெற்றிக் கொண்டாட்டங்களை சீர்குலைத்தமைக்காக சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக நடந்த நினைவேந்தல் நிகழ்வு

இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் உயிர்ப்பலியெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில் இன்று காலை நினைவுச்சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறிலங்கா படையினரின் பிடியில் க.வே.பாலகுமாரன்- மற்றொரு போர்க்குற்ற ஒளிப்படம்

இறுதிக்கட்டப் போரில், சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே.பாலகுமாரன், மற்றும் அவரது மகன் உள்ளிட்ட மூவர் சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய போர்க்குற்ற ஒளிப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சிறிலங்காவின் போர்வீரர் ஞாபகார்த்த நிகழ்வில் வழக்கம்போலவே பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு

மாத்தறையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் போர் வீரர்களை நினைவு கூரும் தேசிய நிகழ்வில், வழக்கம்போலவே பாரிய இராணுவ அணிவகுப்பு இடம்பெறவுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை வழங்குவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை அன்பளிப்புச் செய்வதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தியா – சிறிலங்கா இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க வலியுறுத்துகிறது ஐ.நா

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்புவதற்கு வசதியாக, இருநாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்குமாறு ஐ.நா முகவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிக்க முடியாது – சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், விடுதலைப் புலிகளை நினைவு கூரும் எந்தவொரு முயற்சிக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நோர்வேயின் முதன்மை 10 வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ்ப் பெண் தெரிவு

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் (Top 10) ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ஆம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர்.

கைது செய்யப்பட்டார் சஜின் வாஸ் குணவர்த்தன

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.