மேலும்

Archives

அவுஸ்ரேலியாவில் மோர்லன்ட் நகர முதல்வரானார் இலங்கைத் தமிழ்ப்பெண்

அவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர முதல்வராக, இலங்கையில் பிறந்த சமந்தா ரத்தினம் என்ற தமிழ்ப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழர்களின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாக கொடுக்கமாட்டார்கள் – எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்காவில் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை, பெரும்பான்மைச் சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று  தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான நோர்வேயின்,  முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

மர்மப்பொருள் அம்பாந்தோட்டைக்கு அப்பால் கடலிலேயே விழும் – ஆர்தர் சி கிளார்க் மையம்

விண்வெளியில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும், விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படும், WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள, மர்மப்பொருள், அம்பாந்தோட்டைக்கு அப்பால் 100 கி.மீ தொலைவில் கடலிலேயே விழும் என்று ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.

திறந்த அரசுகளின் கூட்டமைப்பில் இணைந்தது சிறிலங்கா

திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில் (Open Government Partnership) சிறிலங்காவும் புதிய உறுப்பினராக இணைந்து கொண்டுள்ளது.  மெக்சிகோவில் நேற்று முன்தினம் ஆரம்பமான திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில், சிறிலங்கா இணைந்து கொள்வதாக, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்தார்.

கொக்கிளாயில் உயிருடன் கரையொதுங்கிய திமிங்கலத்தை கடலுக்கு விட 8 மணி நேரம் போராட்டம்

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கி உயிருடன் கரையொதுங்கிய 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று 8 மணிநேர போராட்டத்தின் பின்னர், கடலுக்குள் விடப்பட்டது.

வடக்கு மாகாணசபைக்கு நேரடி உதவி வழங்க முடியாது – அமெரிக்க உயர்அதிகாரி கைவிரிப்பு

வடக்கு  மாகாண மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த உதவிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் வழியாகவே செய்ய முடியும் என்றும், நேரடியாக உதவி செய்ய முடியாது என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் படையினரின் கௌரவத்தை பாதுகாப்போம் – மைத்திரி உறுதி

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்கும், முப்படையினரின் கௌரவத்தையும் அபிமானத்தையும் பாதுகாக்கும் கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு இருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்

வானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மூன்று முக்கிய விவகாரங்கள் – கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்

நீண்டகாலத்திற்கு பின்னர்  நேற்றுக் கூட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஐ.நா தீர்மானம், அரசியல் கைதிகளின் விடயம், கூட்டாக செயற்படுதல் ஆகிய மூன்று விவகாரங்கள் குறித்து, நீண்ட நேரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

சேற்றில் சிக்கினார் சிறிலங்கா அதிபர் மைத்திரி

சிறிலங்காவின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழையால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் சேற்றில் சிக்கிக் கொள்ள நேரிட்டது.