மேலும்

Archives

யோசிதவுக்கு மார்ச் 24 வரை விளக்கமறியல் – பசிலுக்குப் பிணை

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேரையும், எதிர்வரும் மார்ச் 24ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து மக்கள் கருத்தறியும் குழு சம்பந்தனுடன் சந்திப்பு

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு நேற்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்  தசியக் கூட்டமைப்பின் தலைவருமான  இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியது.

மூன்று பெண் சாதனையாளர்களுக்கு “நோர்வே தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருது

நோர்வே தமிழ் 3 வானொலியினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் “தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருதுகள் இம்முறை மூன்று பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் உதவி – அமெரிக்க குழு மைத்திரியை சந்திப்பு

சிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் (மிலேனியம் சவால்) திட்டத்தின் கீழ் மீண்டும் உதவியளிக்க அமெரிக்கா முன்வந்துள்ள நிலையில், இதுதொடர்பாக பேச்சுக்களை நடத்த உயர்மட்டக் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் பாகிஸ்தான் அதிபர்

சிறிலங்காவுக்கு குறுகிய காலப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசெய்ன், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

குடாநாட்டின் மூத்த ஊடகவியலாளர் நவரட்ணராஜா மாரடைப்பால் மரணம்

யாழ்.குடாநாட்டின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான என்.நவரட்ணராஜா (வயது62) இன்று அதிகாலை யாழ்.போதனா மருத்துவமனையில் மாரடைப்பினால் மரணமானார்.

முல்லைத்தீவில் சிறிலங்கா படைகளுக்கு சிறப்புப் பயிற்சி – தயார் நிலையில் வைத்திருக்க முயற்சி

முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள சிறிலங்கா படையினருக்கு சிறப்பு காலாலாற்படை மற்றும் பற்றாலியன் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்புத் துறைமுகத்தில் ரஷ்யக் கடற்படைக் கப்பல்

ரஷ்யக் கடற்படையின் கருங்கடல் கப்பல்படையின் மீட்புக் கப்பலான எப்ரோன், நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சிறிலங்காப் பிரதமரை எதிர்பார்த்திருக்கும் சீனா – வளைத்துப் போடத் தயாராகிறது

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பீஜிங் பயணத்தை சீனத் தலைவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக, சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அமைச்சர்கள் மலிக் சமரவிக்கிரம மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்துக்கு தெற்கிலுள்ளவர்களின் மனோநிலை மாற வேண்டும் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் நல்லிணக்கத்தை உருவாக்க தென்பகுதியில் உள்ள மக்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.