திருகோணமலை கடலில் தத்தளித்த 2 யானைகளை மீட்டது சிறிலங்கா கடற்படை
திருகோணமலை கடலில் நேற்றுக்காலை தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு யானைகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டு, பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.
திருகோணமலை கடலில் நேற்றுக்காலை தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு யானைகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டு, பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.
சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முற்பட்ட கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி நேற்று பருத்தித்துறை- வல்லிபுரக்கோவில் பகுதிக்குச் சென்று ஆராய்ந்தார்.
நல்லூரில் நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரி, சிறிலங்கா காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என்று தெரிவித்துள்ள யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்றுமாலை நடந்த தாக்குதல் தொடர்பாக விபரித்துள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல்களை, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சீனாவின் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டிலான துறைமுக நகரத்தை, அமெரிக்காவின் பிரதான கட்டட வடிவமைப்பு நிறுவனமான, ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் அன் மெரில் நிறுவனமே வடிவமைக்கவுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பென்ட்மனை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
பாரிய உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பல் உள்ளிட்ட ஜப்பானிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.