மேலும்

Tag Archives: விஜேதாச ராஜபக்ச

ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் முரண்படாது – ராஜித சேனாரத்ன

மனித உரிமைகள் விவகாரத்தில் ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் முரண்படாது என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஐ.நாவின் வழிகாட்டு முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது – விஜேதாச ராஜபக்ச

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எப்படி வரைய வேண்டும் என்ற ஐ.நாவின் வழிகாட்டுமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் குழுவில் ஓரம்கட்டப்பட்ட மங்கள

ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான பொறிமுறை ஒன்று சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படாமல் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஓரம்கட்டப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை – விஜேதாச ராஜபக்ச

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா- இல்லையா என்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்று நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சியை நிராகரித்த சம்பந்தன் – சிங்களத் தலைவர்களின் கருத்து என்ன?

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதி உச்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய சமஷ்டி முறை மூலமே, தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துக்கு சிங்கள அரசியல் தலைமைகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

விழிப்புநிலையில் இருக்கிறதாம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

வடக்கில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்க, பாதுகாப்பு அமைச்சு முழு அளவிலான விழிப்பு நிலையில் இருக்கும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி – ரணிலிடம் சமந்தா பவர்

அமெரிக்க – சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளைப் புனர்வாழ்வுக்கு அனுப்ப கூட்டமைப்பு கோரவில்லை- சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வு அளித்து விடுவிப்பது தொடர்பான பரிந்துரையை சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடற்படையிடம் ஒப்படைக்கப்படவில்லை – ராஜிதவின் அறிவிப்பை விஜேதாச நிராகரிப்பு

அவன் கார்ட் நிறுவனத்தின் செயற்பாடுகளை சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிடவில்லை என்றும் அதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயுமாறே அதிகாரிகளை கேட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவன் கார்ட் நிறுவனம் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைப்பு – சிறிலங்கா அதிபர் உத்தரவு

அவன் கார்ட் நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்பாடுகளை ரத்துச் செய்து, குறித்த நிறுவனம் முன்னெடுத்து வந்த அனைத்து நடவடிக்கைகளையும் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.