பரபரப்பான சூழலில் இன்று அவசரமாகக் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்
பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக நடத்தப்படவுள்ள தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து நிபுணர்களின் உதவியைப் பெற சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணை அறிக்கை தொடர்பாக விவாதிக்க, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இந்தவாரம் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் சார்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிதைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட, மற்றும் கிறுக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கான காலஅவகாசம் சிறிலங்கா மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர், அதிபர் செயலக அதிகாரிகள் அதனை முழுமையாக ஆராயவுள்ளனர்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை இன்று அல்லது நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் பெறப்பட்ட முதற்கட்ட கொடுப்பனவான, 292.1 மில்லியன் டொலர் சிறிலங்கா மத்திய வங்கியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
எழுதுகருவிகளினால் கிறுக்கப்பட்ட, வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட, அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள், வரும் டிசெம்பர் 31ஆம் நாளுக்குப் பின்னர் செல்லுபடியாகாது என்று சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது.