மேலும்

Tag Archives: புலிகள்

பாலச்சந்திரனும், இசைப்பிரியாவும் ஆயுதப் போராளிகள் தான் – என்கிறார் மகிந்த

விடுதலைப் புலிகளின் தலைவர்  வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச.

அப்போது ஆயுதங்களுடன் போராடியவர்கள் இப்போது பசி வேதனையுடன் போராடுகின்றனர்

போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை. 

மகிந்தவின் நிகழ்ச்சிநிரலில் இருந்து விலகாத பரணகம ஆணைக்குழு

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையையும், உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையையும், நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது அரசாங்கம்.

தமிழீழம், புலிகள் தோன்றக் காரணம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையே – சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததே, தமிழீழம், புலிகள் என்ற வாதங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

கிரித்தல இராணுவ முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எக்னெலிகொட – விசாரணையில் உறுதி

காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கிரித்தல இராணுவ முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது உறுதியாகியிருப்பதாக,  குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசுவாசிகளாலேயே தோற்கடிக்கப்பட்ட மகிந்த – நடந்தது என்ன? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

மகிந்தவின் விசுவாசிகளே மகிந்தவின் தேர்தல் தோல்விக்குக் காரணம். தேர்தல் பரப்புரைக்கு தலைமை தாங்குவதற்கு மைத்திரியை மகிந்த அனுமதித்திருந்தால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும். மகிந்தவின் விசுவாசிகள் மகிந்தவை மட்டுமல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தோற்கடித்துள்ளனர்.

அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டது தவறு – முற்றாக அழிக்கப் போவதாக கோத்தா சூளுரை

அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டு விட்டதாகவும், வடக்கை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புலிகளின் தலையீட்டை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் சூளுரைத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கூடாது – நிமால் சிறிபால டி சில்வா

வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு கூறுவதற்கு விக்னேஸ்வரன் ஒன்றும் சிறிலங்கா அதிபர் அல்ல, யார் சொன்னாலும் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.