சிறிலங்காவில் ஓகஸ்ட் 27ம் நாள் நாடாளுமன்றத் தேர்தல்? – கொழும்பு வாரஇதழ் தகவல்
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஓகஸ்ட் 27ம் நாள் நடைபெறலாம் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஓகஸ்ட் 27ம் நாள் நடைபெறலாம் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் செப்ரெம்பர் மாதம் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை ஊடக ஆசிரியர்கள், நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றம், இந்த மாத இறுதியிலேயே கலைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, எதிர்வரும் 20ம் நாள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டது.
சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் புதன்கிழமை (மே 20ம் நாள்) கலைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றம் இந்த மாத இறுதியில் கலைக்கப்பட்டு புதுிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறிகளைத் தீருக்கும் கடைசி நேர முயற்சியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று, பரபரப்பான சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த 19வது திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னரே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த தாம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மேற்கு நாட்டுத் தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை இரவு 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் மிக முக்கியமான உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் பயணம் நிறைவடையும் வரை, நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று, சிறிலங்காவின் பிரதி நீதி அமைச்சர் சுஜீன செனசிங்க தெரிவித்துள்ளார்.