நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ரணில் எச்சரிக்கை
சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
ஆளும்கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படாததால், ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், மகிந்த ராஜபக்சவுடன் கடைசி நேரத்தில் இணைந்து கொண்டவருமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார்.
சிறிலங்காவில் கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, முதல்முறையாக இன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது.